தமிழகம் வர்த்தகம்

பொதுமக்கள் அதிர்ச்சி!. மக்களை திணறடிக்கும் பெட்ரோல் டீசல் விலை!.

Summary:

today petrol, desel prizes tamilnadu

கடந்த ஒரு வாரமாகவே பெட்ரோல், டீசல் விலையானது அதிகரித்து வருகிறது. நேற்றைய முன்தினம் பெட்ரோல் விலை லி.க்கு 13 பைசா உயர்ந்து ரூ.73.15 ஆகவும், டீசலின் விலை லி.க்கு 21 பைசா உயர்ந்து ரூ.68.43 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நேற்று, பெட்ரோல் விலை 8 பைசா அதிகரித்து ரூ. 73.23 ஆகவும், டீசல் விலை லி.க்கு 19 பைசா அதிகரித்து ரூ. 68.62 க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து இன்றும் உயர்ந்துள்ள பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து உள்ளனர்.

petrol and diesel price in chennai today (19-01-2019)

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய் விலை, அதிகரித்ததாலும் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததாலும் பெட்ரோல், டீசல் விலை இரண்டு மாதங்களுக்கு முன்பு வரலாறு காணாத அளவு உயர்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்ததால், அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்தது. இதனால் மக்கள் வேதனை அடைந்தனர். இதனால் மக்கள் வாகனம் ஓட்டுவதையே தவிர்த்துவந்தனர்.

இந்நிலையில் 5 மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, கடந்த சில  நாட்களாக பெட்ரோல், டீசல் விலையானது சிறிது சிறிதாக குறைந்ததால் வாகன ஓட்டிகள் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து, பெட்ரோல் விலை அதிகரிக்க ஆரம்பித்தது. தற்போது மீண்டும் அதிகரித்து உள்ளது.

இந்நிலையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 24 பைசா அதிகரித்து ரூ. 73.65 ஆகவும், டீசலின் விலை லிட்டருக்கு 31 பைசா அதிகரித்து ரூ. 69.14  க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Advertisement