தமிழகம்

கொரோனா எதிரொலி: 10 ஆம் வகுப்பு பாடங்கள் இன்று முதல் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பு.!

Summary:

Today onwards 10th silabas publish in DD chanel

நாடு முழுவதும் கொரோனா எதிரொலி காரணமாக கடந்த மாதம் 27 ஆம் தேதி நடக்கவிருந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் அனைத்தும் ஏப்ரல் 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் கொரோனாவின் பாதிப்பு எண்ணிக்கை குறையாத காரணத்தால் பிரதமர் மோடி அவர்கள் ஊரடங்கை மீண்டும் மே 3 ஆம் தேதி வரை நீட்டிருந்துள்ளார்.

இதனை அடுத்து பத்தாம் வகுப்பு பொது தேர்வுகளும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஆனால் பொது தேர்வுகள் ரத்து செய்யப்படவில்லை, கண்டிப்பாக நடைப்பெறும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. அப்படி நடைப்பெறும் தேர்வுகளுக்கு ஒவ்வொரு பாடத்திற்கு அதிகளவு விடுமுறை இன்றி 10 நாட்களுக்குள் தேர்வுகள் நடைப்பெற்று முடிந்து விடும் என்றும் பள்ளி கல்வி துறை தெரிவித்துள்ளது.

எனவே மாணவர்கள் தற்போது உள்ள விடுமுறையை நன்கு பயன்படுத்தி கொண்டு தேர்வுக்கு தங்களை தயார் செய்து கொள்ளலாம்.மேலும் மாணவர்களுக்கு எளிதில் சென்றடையும் வகையில் இன்று முதல் பத்தாம் வகுப்பு பாடங்களை பொதிகை தொலைக்காட்சியில் காலை 10 மணி முதல் 11 மணி வரை ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது. 


Advertisement