
today morning started rain
சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர். குளிர்காலம் முடிந்து வெயில் தலைகாட்ட தொடங்கிவிட்டது. பிப்ரவரி மாதமே வெயிலின் தாக்கம் சற்று உயர்வாகவே இருந்தது.
இந்தநிலையில், சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், திடீரென்று பரவலாக மழை பெய்யத் தொடங்கியது.
இன்று காலை முதல் சென்னையின் புறநகர் பகுதிகளில் அண்ணாநகர், ரெட்டேரி, அடையாறு, கொளத்தூர், பல்லாவரம், மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும், ஆவடி, அம்பத்தூர், அயனம்பாக்கம், பெரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
இதேபோன்று திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, செங்குன்றம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.
வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அவ்வப்போது வெப்பச்சலனம் காரணமாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு பெய்த இந்த சாரல் மழையால் பொதுமக்கள் சந்தோஷத்தில் உள்ளனர்.
Advertisement
Advertisement