மாதம் ஒரு லட்சம் வரை சம்பளம் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு; தகுதியானவர்கள் மிஸ் பண்ணிடாதீங்க.!

மாதம் ஒரு லட்சம் வரை சம்பளம் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு; தகுதியானவர்கள் மிஸ் பண்ணிடாதீங்க.!


tnpsc new notification - 64 vacancies - tamilnadu

தமிழக தடய அறிவியல் துறையில் காலியாக உள்ள 64 இளநிலை அறிவியல் அதிகாரி (Junior Scientific Officer) பணியிடங்களை நிரப்புதவற்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.

கல்வித் தகுதி:
தடய அறிவியல் துறையில் எம்.எஸ்சி. பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது விண்ணப்பிக்கும் பிரிவில் (இயற்பியல், வேதியியல், உயிரியல்) எம்.எஸ்சி. பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு:
டிஎன்பிஎஸ்சி இளநிலை அறிவியல் அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 01.07.2019 அன்று 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

சம்பளம்:
பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் 36,900 ரூபாய் முதல் 1,16,600 ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும். 

கட்டணம்:
பதிவுக் கட்டணம் 150 ரூபாயும் விண்ணப்பக் கட்டணம் 100 ரூபாயும் செலுத்த வேண்டும். ஒரு முறை பதிவுக் கட்டணம் செலுத்தி பதிவு செய்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும். 

tnpsc

முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் - ஜூலை 22, 2019 
(எஸ்பிஐ அல்லது ஹெச்டிஎப்சி வங்கி மூலம்) ஆன்லைனில் கட்டணம் செலுத்த கடைசி நாள் – ஜூலை 24, 2019 

தேர்வு முறை:
இரண்டு தாள்களாக நடைபெறும் இத்தேர்வு ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட உள்ளது. முதல் தாள் தேர்வு ஆகஸ்ட் 24ஆம் தேதி காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை நடக்கும். இரண்டாம் தாள் தேர்வு அதே நாளில் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணிக்கு முடியும். 

இந்தப் பணியில் சேர விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த வேலை வாய்ப்பு பற்றி இன்னும் அதிக விவரங்களை அறிந்துகொள்ள கீழ்க்கண்ட அதிகாரப்பூர்வ விளம்பரத்தை பார்க்கலாம்.
http://www.tnpsc.gov.in/Notifications/2019_20_notyfn_JSO.pdf