தமிழகம்

டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள் டிசம்பர் வெளியீடு; தேர்வாணையம் அறிவிப்பு.!

Summary:

tnpsc - primary exam result decemper

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள் வரும் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பல்வேறு துறைகளில்  காலியாக உள்ள பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-1 , குரூப்-2 ,குரூப்-4 ,VAO போன்ற தேர்வுகளை நடத்துகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி-1ல் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஆண்டு(2017) பிப்ரவரி 19-ம் தேதி நடந்து அதன் தேர்வு முடிவு 21.7.2017 அன்று வெளியிடப்பட்டது. 

Related image

இது சம்பந்தமாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் : 

தொடர்ந்து 13.10.2017, 14.10.2017 மற்றும் 15.10.2017 ஆகிய தேதிகளில் முதன்மை தேர்வு நடந்தது. இதற்கான தேர்வு முடிவுகள் வருகிற டிசம்பர் மாதம் இறுதிக்குள் வெளியிட உத்தேசிக்கப்பட்டு அது தொடர்பான விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

விடைத்தாள்கள் திருத்தும் பணி மிகவும் நேர்மையாகவும், பாதுகாப்பாகவும் ரகசியம் காப்பதில் மிகுந்த எச்சரிக்கையுடனும் நடைபெற்று வருவதால், தேர்வர்கள் இதுகுறித்து அவ்வப்போது வெளியாகும் தவறான, அவதூறான செய்திகள் குறித்து கவலைப்பட தேவையில்லை. 

மேலும் ஏமாற்றுக்காரர்கள் மற்றும் இடைத்தரகர்களின் தவறான வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம். என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 


Advertisement