BREAKING: பழம்பெறும் நடிகை செளகார் ஜானகி கவலைக்கிடம்... மருத்துவமனையின் அதிர்ச்சி அறிக்கை..!!!
அதிர்ச்சி! தமிழர்களின் 7 கோடி ரேஷன் கார்டுகளின் ரகசிய தகவல்கள் திருட்டு? தமிழக அரசுக்கு CERT-In அதிரடி எச்சரிக்கை...!!!
தமிழகத்தில் 2.28 கோடி ரேஷன் கார்டுகள் மூலம் சுமார் 7.01 கோடி பேர் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர். புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் முதல் முகவரி மாற்றம், பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட சேவைகள் அனைத்தும் தற்போது இணையவழியில் செயல்படுத்தப்படுகின்றன. இந்த நிலையில், ரேஷன் கார்டுதாரர்களின் முக்கியமான தனிப்பட்ட தகவல்களுக்கு சைபர் அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.
ரேஷன் கார்டு தரவுகளுக்கு சைபர் அச்சுறுத்தல்
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கணினி அவசர கால பதிலளிப்பு குழு (CERT-In), தமிழக அரசுக்கு இதுதொடர்பாக முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. பொது விநியோகத் திட்ட இணையதளத்தில் சேமிக்கப்பட்டுள்ள ரேஷன் கார்டுதாரர்களின் தனிப்பட்ட விவரங்களை சைபர் குற்றவாளிகள் திருடுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: என்ன நடக்குது.... ரூ 33 லட்சம் டெண்டர் திடீர் ரத்து! அதிரவைக்கும் ஆடியோ லீக்..... அரசுக்கு எதிரான அதிர்ச்சி குற்றச்சாட்டு..!!!
குறிப்பாக ஆதார் எண், தொலைபேசி எண், முகவரி உள்ளிட்ட முக்கியமான தகவல்களின் பாதுகாப்பு குறித்து கவலை எழுந்துள்ளது. முன்னுரிமை கார்டுகள், அந்தியோதயா அன்னயோஜனா கார்டுகள், அரிசி மற்றும் சர்க்கரை கார்டுகள் என பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான பயனாளிகளின் தரவுகள் இதில் அடங்கியுள்ளன.
தமிழக அரசுக்கு மத்திய குழு அறிவுறுத்தல்
சைபர் தாக்குதல்களை முன்கூட்டியே தடுத்து நிறுத்துவதுடன், இணையதளத்தின் பாதுகாப்பு கட்டமைப்பையும் உடனடியாக பலப்படுத்த வேண்டும் என மத்திய குழு அறிவுறுத்தியுள்ளது. கோடிக்கணக்கான மக்களின் தகவல்கள் ஒரே தளத்தில் இருப்பதால், சிறிய பாதுகாப்பு குறைபாடுகூட பெரிய அளவிலான தரவு கசிவுக்கு வழிவகுக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, தமிழக உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. பொது விநியோகத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நவீன Firewall பாதுகாப்பு உள்ளிட்ட கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை நிறுவும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. சைபர் ஊடுருவலைத் தடுப்பதற்கான தொழில்நுட்ப நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோடிக்கணக்கான பயனாளிகளின் தகவல் பாதுகாப்பு
ரேஷன் கார்டு தொடர்பான சேவைகள் தொடர்ந்து டிஜிட்டல் முறைக்கு மாறிவரும் நிலையில், இணையப் பாதுகாப்பு விவகாரம் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ரேஷன் கார்டு தரவுகள் தவறான நபர்களின் கைகளுக்குச் செல்லாமல் தடுக்க, பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசின் எச்சரிக்கையைத் தொடர்ந்து தமிழக அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மீது தற்போது கவனம் திரும்பியுள்ளது.
இதையும் படிங்க: தொண்டை எரியுது.... வயிறு வலிக்குதுன்னு கத்தினி குழந்தைகள்! சமையலறை ஆய்வில் கிடைத்த அதிர்ச்சி பொருள்.... துடிதுடித்த பள்ளி குழந்தைகள்..!!!