BREAKING! மாணவர்களே.... பிளஸ்-2 தேர்வு முடிவுகள் மே-8 ஆம் தேதி வெளியாகாது! அதிரடி காரணத்தால் கல்விவித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!



tn-plus2-result-delay-new-government

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வு முடிவு வெளியீடு தாமதமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. முதலில் திட்டமிடப்பட்டபடி மே 8-ஆம் தேதி முடிவுகள் வெளியாகாது என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. புதிய அரசு அமைக்கும் நடைமுறைகள் காரணமாக அதிகாரப்பூர்வ ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

8 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வு

கடந்த மார்ச் 2 முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வுவில் சுமார் 8 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். தேர்வு முடிந்த பிறகு, ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கிய விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 20க்குள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டன.

இதையும் படிங்க: BREAKING: பிளஸ் -2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது அரசுத் தேர்வுகள் இயக்கம்..!!!

தகவலின்படி, அனைத்து மாணவர்களின் மதிப்பெண்களும் தயாராகி இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. இருப்பினும், முடிவுகளை வெளியிட அரசின் முறையான அனுமதி அவசியமாக இருப்பதால் தற்போது அறிவிப்பு வெளியிடப்படாமல் உள்ளது.

புதிய அரசு ஒப்புதலுக்கு பிறகே வெளியீடு

தற்போதைய அரசியல் சூழல் மற்றும் ஆட்சி மாற்றம் காரணமாக புதிய அமைச்சரவை பதவியேற்ற பிறகே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, புதிய தேதியை அரசு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாணவர்கள் காத்திருக்கும் நிலை

இதனால் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த மாணவர்களும் பெற்றோர்களும் மேலும் சில நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கல்லூரி சேர்க்கை மற்றும் உயர்கல்வி விண்ணப்பங்களை திட்டமிட்டு இருந்த மாணவர்கள் அடுத்த அறிவிப்பை கவனமாக எதிர்நோக்கி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: BREAKING: சற்று முன்.... தேர்வு முடிவுகள் இந்த இணையதளத்தில் வெளியானது! அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!