திமுகவிடம் அதிமுக விரைவில் ஐக்கியம் ஆகும் - அமைச்சர் பரபரப்பு பேட்டி.!TN Minister Periyasamy Pressmeet at Madurai about AIADMK Party Will Join DMK

கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் திமுக 10 வருடங்கள் கழித்து அமோக வெற்றியடைந்து, தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்தது. திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சேர்ந்து பெற்ற வெற்றியானது, உள்ளாட்சி தேர்தலிலும் எதிரொலித்தது. 

இதனைத்தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடைபெற்ற நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி இமாலய வெற்றியை பதிவு செய்தது. 

Minister Periyasamy

இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பெரியசாமி பேசுகையில், "காலப்போக்கில் அதிமுக திமுகவிடத்திலேயே சங்கமம் ஆகிவிடும். அதிமுகவில் சரியான தலைமை இல்லை. அதுவே நகர்ப்புற தேர்தலில் டெபாசிட் இழக்க காரணம்" என்று தெரிவித்தார்.