#JustIN: இந்துத்துவாவுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது..!
தமிழகத்தில் தேர்தலுக்கு பின் மீண்டும் முழு ஊரடங்கு? சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கம்...!
தமிழகத்தில் தேர்தலுக்கு பின் மீண்டும் முழு ஊரடங்கு? சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கம்...!

தேர்தலுக்கு பிறகு தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து விளக்கமளித்துள்ளார் சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்துவருகிறது. இதனால் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதேநேரம் நாளை தேர்தல் முடிந்த பிறகு ஊரடங்கு நடைமுறை குறித்த அறிவுப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றது.
இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு என கூறப்படுவது உண்மையா என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். நாளை வாக்கு பதிவு மையங்களுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என கூறிய சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியுள்ளது.
இதனால் உலக நாடுகளை பின்னுக்கு தள்ளி அதிக கொரோனா பாதிப்பில் இந்தியா முன்னோக்கி சென்றுகொண்டிருக்கிறது. தமிழகத்திலும் பாதிப்பு எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துவருகிறது. எனவே கொரோனா தடுப்பூசியை 45 வயதிற்கு மேற்பட்ட மக்கள் கண்டிப்பாக போட்டுக்கொள்ள வேண்டும்.
கூட்டம் கூடும் நிகழ்ச்சிகளை மக்கள் தவிர்க்க வேண்டும், அதேபோல் தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற தகவலை மக்கள் யாரும் நம்ப வேண்டாம். அதைக்குறித்து பதற்றப்பட தேவையில்லை எனவும் சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் கூறிய அவர், தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறையை அமல்படுத்தும் திட்டம் தற்போது அரசுக்கு இல்லை. தேர்தல் முடிந்து மறுநாளில் இருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கை இன்னும் வேகமாக தீவிரமாக்கப்படும், என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.