மாதம் ரூ.60 ஆயிரம் சம்பளம் வாங்குபவர் ஏழையா?.. EWS 10% இட ஒதுக்கீடு விவகாரத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கொந்தளிப்பு.. சரமாரி கேள்வி.! 

மாதம் ரூ.60 ஆயிரம் சம்பளம் வாங்குபவர் ஏழையா?.. EWS 10% இட ஒதுக்கீடு விவகாரத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கொந்தளிப்பு.. சரமாரி கேள்வி.! 


TN CM MK Stalin Statement about EWS 10 Percentage Quota

 

சமூக நீதிக்கொலைக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது என தமிழ்நாடு முதல்வர் பேசினார்.

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்காக அரசு கல்வி & வேலைவாய்ப்புகளில் 10% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றி சட்டமாக்கப்பட்ட நிலையில், அதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் மசோதாவை உறுதி செய்து அறிவிப்பு வெளியிட்டது. 

இந்த விசயத்திற்கு இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் மற்றும் பிற சமூகத்தினரிடையே கடும் எதிர்ப்பும், வரவேற்பும் என இருதரப்பு விவாதங்கள் நிலவி வருகின்றன. உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியானதும் தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அதனை எதிர்த்து தனது கண்டன குரலை வெளிப்படுத்தி இருந்தார். 

tamilnadu

இந்த நிலையில், இன்று தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. அப்போது உரையாற்றிய தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், "இட ஒதுக்கீட்டினால் தகுதியும், திறமையும் போனது என கூறிய பலரும் இன்று 10% இட ஒதுக்கீட்டினை ஆதரிக்கிறார்கள். 

இதனால் சமூக நீதிக்கொள்கைக்கே மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது. ஏழை மக்களுடைய வறுமையை போக்க மத்திய அரசு எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதனை திமுக ஆதரித்து முன்னெடுத்து செல்லும். ஆனால், மாத வருமானம் ரூ.60 ஆயிரம் வாங்குபவர் ஏழையா?. சமூக கல்வி ரீதியாக மட்டுமே இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அதுவே சரியானதாக இருக்கும்" என்று பேசினார்.