ஊரடங்கு இத்துடன் முடிவுக்கு வருகிறதா..? மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் நாளை முக்கிய ஆலோசனை..!

ஊரடங்கு இத்துடன் முடிவுக்கு வருகிறதா..? மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் நாளை முக்கிய ஆலோசனை..!



TN CM consult doctors tomorrow over corono status

கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து மருத்துவ நிபுணர்களுடன் தமிழக முதல்வர் எட்டப்பட்ட பழனிச்சாமி நாளை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார்.

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி பாரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியவருகிறது. வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியாவில் வரும் மே 31 வரை ஊரடங்கு அமலில் உள்ளது.

அதேநேரம் பல்வேறு தொழில்கள், சிலவகை போக்குவரத்துகளை தொடங்கு அரசு நிபந்தனையுடன் அனுமதி வழங்கியுள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துக்கொண்ட வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பல மடங்கு அதிகரித்துவருகிறது.

corono

இந்நிலையில் நான்காம்கட்ட ஊரடங்கு இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் மீண்டும் ஊரடங்கு இத்துடன் முடிவுக்கு வருமா? அல்லது மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு மேலும் நீடிக்கப்படுமா என தெரிந்துகொள்ள மக்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொடர்பாக தமிழக அரசு நியமித்த மருத்துவ நிபுணர்க்ளுடன் முதல்வர் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். தற்போதைய கொரோனா பாதிப்பு நிலவரம், மே 31 க்கு பிறகு எடுக்கப்பட்ட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது.