10 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் மீண்டும் ஒத்திவைப்பு..! வெளியானது புது கால அட்டவணை..!TN 10th exam 2020 postponed to june 15th

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலையே முடங்கி உள்ளனர். இந்தியாவில் நான்கு கட்டங்களாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தற்போது மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தமுறை பல்வேறு தொழில்களை மீண்டும் தொடங்க அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.

10th Exam

இந்நிலையில் நான்காம்கட்ட அறிவிப்பிற்கு முன்னதாக வரும் ஜூன் 1 முதல் தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்கும் எனவும், அதற்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டது. தற்போது ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால் தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வருடன் இன்று ஆலோசனை நடத்திய பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில் ஜூன் ஒன்று தொடங்குவதாக இருந்த தேர்வுகள் ஜூன் 15 ஆம் தேதி தொடங்கி ஜூன் 25 ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

புது அட்டவணை இதோ:

10th Exam