16 வயது பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய 19 வயது கல்லூரி மாணவர் போக்ஸோவில் கைது..! வீட்டுக்கு அழைத்து சென்று பலாத்காரம்..!!Tiruvannamalai Vembakkam School Girl Sexual Abuse by Love Boy He Studied College

 

பள்ளியில் பயின்று வரும் மாணவியை காதலிப்பதாக கூறி கல்லூரி மாணவர் பலாத்காரம் செய்ததால் சிறுமி 3 மாத கர்ப்பமான சோகம் நடந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வெம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி, அங்குள்ள அரசுப்பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார். வெம்பாக்கம் அருகேயுள்ள வைரவபுரம் கிராமத்தில் 19 வயது மாணவர் வசித்து வருகிறார். 

இவர் அங்குள்ள தனியார் பாலிடெக்னீக் கல்லூரியில் பயின்று வருகிறார். இருவரும் தங்களின் பள்ளி & கல்லூரிகளுக்கு சென்று வரும்போது சந்தித்துக்கொண்டுள்ளனர். இந்த பழக்கம் பின்னாளில் காதலாக மாறியுள்ளது. 

இருவரும் தங்களின் காதலை வளர்த்து வந்த நிலையில், சம்பவத்தன்று சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்து சென்ற இளைஞன் ஆசையாக பேசி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

Tiruvannamalai

இந்நிலையில், சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்படவே, செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் செய்த சோதனையில் சிறுமி 3 மாத கர்ப்பிணி என்பது உறுதியானது. 

இதனையடுத்து, காவல் துறையினருக்கு தகவல் தெரியவரவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் பாலிடெக்னீக் கல்லூரி மாணவர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.