மனைவியின் நடத்தையில் சந்தேகம் ; அரிவாளால் மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவன் : இரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க பலியான உயிர்.!

மனைவியின் நடத்தையில் சந்தேகம் ; அரிவாளால் மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற கணவன் : இரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க பலியான உயிர்.!tiruvannamalai-man-killed-wife-due-to-doubts

மனைவியின் மீது சந்தேகம் கொண்ட கணவன், ஆத்திரத்தில் சென்ற மனைவியை அரிவாளால் கழுத்தறுத்து கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர், அலங்காரமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் சுரேஷ் (வயது 36). இவர் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். சுரேஷின் மனைவி பச்சையம்மாள் (வயது 30). தம்பதிகளுக்கு திவ்யா, கதிர்வேல் என்ற 2 குழந்தைகள் இருக்கின்றனர். பச்சையம்மாள் யாரிடமோ அவ்வப்போது போனில் சிரித்து பேசிக்கொண்டு இருந்துள்ளார். 

கணவர் யாரிடம் பேசுகிறாய் என மனைவியை கேட்டும் பலனில்லை. இதனால் பச்சையம்மாள் நடவடிக்கையில் சந்தேகமடைந்த சுரேஷ், அவ்போது மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக இவர்களுக்குள் நடந்த தகராறின் காரணமாக ஆத்திரமடைந்த பச்சையம்மாள் தனது அத்தை வீட்டிற்கு சென்றுள்ளார். 

Tiruvannamalai

நேற்று மனைவிக்கு போனில் தொடர்பு கொண்ட சுரேஷ், பிள்ளைகளை விட்டுவிட்டு சென்றுவிட்டாய்., அவர்களை நாம் தானே பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இதனால் இருவருக்குள்ளும் மீண்டும் தகராறு ஏற்படவே, ஆத்திரத்தில் மனைவியின் அத்தை வீட்டிற்கு சென்ற சுரேஷ், மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவத்தில் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த பச்சையம்மாள் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மனைவியை கொலை செய்த சுரேஷ், அரிவாளுடன் போளூர் காவல் நிலையத்திற்கு சென்று விஷயத்தை கூறி சரணடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.