தமிழகம்

கல்லூரியில் இருந்து காதல்.. சந்தேகத்தால் நடுரோட்டில் பெண்ணுக்கு அடி-உதை..! சிறையில் வைத்த காதலி.!

Summary:

கல்லூரியில் இருந்து காதல்.. சந்தேகத்தால் நடுரோட்டில் பெண்ணுக்கு அடி-உதை..! சிறையில் வைத்த காதலி.!

காதலியின் மீது சந்தேகம் கொண்ட காதலன், அவரை அடித்து உதைக்க காவல் துறையினர் காதலனை கைது செய்தனர். 

சென்னையில் உள்ள அம்பத்தூர் பாடி, சி.டி.எச் சாலை மேம்பாலம் அருகே செயல்பட்டு வரும் துணிக்கடையில், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் கரும்பூந்தி கிராமத்தை சேர்ந்த ஸ்வேதா (வயது 20) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் பாடி பார்க் ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் விடுதியில் தங்கி இருந்துள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் இரும்பூண்டி கிராமம், பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் நவீன்குமார் (வயது 21). ஸ்வேதா - நவீன்குமார் இருவரும் திருவண்ணாமலையில் உள்ள கலைக்கல்லூரியில் ஒன்றாக பயின்று வருகையில் பழக்கம் ஏற்பட்டு காதலிக்க தொடங்கியுள்ளனர். காதல் ஜோடி கடந்த 4 வருடமாக காதலித்து வந்துள்ளது. 

இந்நிலையில், காதலியை பார்க்க நவீன்குமார் பாடியில் உள்ள விடுதிக்கு வந்த நிலையில், தனது காதலியின் அலைபேசியை வாங்கி பார்த்துள்ளார். அப்போது, நண்பர் ஒருவர் ஸ்வேதாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பவே, இவர் யார்? என கேட்டுள்ளார். 

ஸ்வேதா தனது நண்பர் என்று கூற, அதனை ஏற்றுக்கொள்ள மறுத்த நவீன்குமார், காதலியின் மீது சந்தேகப்பட்டு அவரை அவதூறாக பேசி, சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இதனால் மனவேதனைக்கு சென்ற ஸ்வேதா, கொரட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் நவீன் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 


Advertisement