AVM சரவணன் காலமானார்! முதல் ஆளாக கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்! பெரும் சோகம்..!!
இட்லி, வேர்க்கடலை சட்னி சாப்பிட்ட 11 வயது சிறுமி உயிரிழப்பு! திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பு!
ஒரே வீட்டில் அம்மா சமைத்த உணவை சாப்பிட்ட பிறகு குழந்தைகள் உடல்நிலை மோசமடைந்த சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடும்பம் முழுவதையும் தாக்கிய இந்த துயரச் சம்பவம் தற்போது மாவட்டம் முழுவதும் கவலையைக் கிளப்பியுள்ளது.
வெம்பாக்கம் தாலுகா பணமுகை கிராமத்தை சேர்ந்த மணிகண்டனின் மனைவி வனிதா, தனது மூன்று மகள்களான பிரணிதா (11), டிக்ஷிதா (9), டில்ஷிதா (7) ஆகியோருடன் கடந்த 23ஆம் தேதி காலை வேர்க்கடலை சட்னியுடன் இட்லி சாப்பிட்டார். அன்று இரவே நால்வருக்கும் திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது.
முதலுதவி பின்னரும் உடல்நிலை மோசமடைப்பு
அடுத்த நாள் காலை அருகிலுள்ள தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஆனால் மாலை நேரத்தில் பிரணிதா மற்றும் டிக்ஷிதா இருவரும் மயக்கம் அடைந்ததால் முதலில் வாலாஜா அரசு மருத்துவமனைக்கும் பின்னர் வேலூர் அரசு மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டனர்.
இதையும் படிங்க: இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 17 வயது பெண்! திடீரென அம்மா என்று அலறியதும்... பெற்றோர் கண்ணெதிரே கண்ட அதிர்ச்சி!
சிகிச்சை பெற்று வந்த 11 வயது சிறுமி உயிரிழப்பு
தொடர்ந்து, பிரணிதாவின் நிலை மேலும் மோசமடைந்ததால் 26ஆம் தேதி வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் அளித்த சிகிச்சைக்கும் பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த அதிர்ச்சி மரணம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போலீசார் விசாரணை தீவிரம்
சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, வேர்க்கடலை சட்னியில் ஏதேனும் விஷப்பொருள் கலந்திருக்கிறதா என்பதை உள்ளடக்கிய பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அம்மா சமைத்த உணவை சாப்பிட்ட பிறகு சிறுமி உயிரிழந்த துயரமான இந்தச் சம்பவம், உணவு பாதுகாப்பு குறித்த கவலைகளை மீண்டும் தலைதூக்க வைத்துள்ளது.
இதையும் படிங்க: இப்படியா நடக்கணும்! வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த 1 வயது குழந்தை! பள்ளி பேருந்தால் நொடிப்பொழுத்தில் நடந்த துயரம்!