தமிழகம்

நரம்பு துண்டித்து தந்தை மர்மச்சாவு., வீட்டில் பிணமாக மகள்.. நடந்தது என்ன?.. திருவண்ணாமலையில் பகீர் சம்பவம்.!

Summary:

நரம்பு துண்டித்து தந்தை மர்மச்சாவு., வீட்டில் பிணமாக மகள்.. நடந்தது என்ன?.. திருவண்ணாமலையில் பகீர் சம்பவம்.!

தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில், அவரின் மகள் வீட்டில் பிணமாக இருந்துள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்செட்டிபட்டு கிராமத்தில் வசித்து வருபவர் சிவபாலன் (வயது 40). இவர் சே.கூடலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக இருக்கிறார். இவருக்கு திருமணம் முடிந்து ரம்பா என்ற மனைவி, ஒரு மகள், மகன் இருக்கின்றனர். 

கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக சிவபாலன் செல்போனை வீட்டில் தவறவிட்டு வெளியே சென்ற நிலையில், அவரின் வீட்டில் மகள் தேவிப்பிரியா (வயது 17) மயங்கி கிடந்துள்ளார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

மருத்துவமனையில் சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். சிவபாலன் எங்கே என விசாரணை செய்ய தொடங்கிய நிலையில், அவர் மணலூர்பேட்டை சாலையில் கழுத்து, கை, நரம்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டார்.

மேலும், அவரின் மோட்டார் சைக்கிளும் சம்பவ இடத்தில் இருந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சிவபாலனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தந்தையும், மகளும் எப்படி இறந்தார்கள்? என்ற விஷயத்தில் மர்மம் நிலவுவதால், அது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி தேவிப்பிரியா தனியார் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயின்று வரும் நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண்ணும் பெற்றுள்ளார். 

விருதுநகர் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட சிவபாலன், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வேலையாம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ரம்பாவை காதல் திருமணம் செய்துள்ளார். விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.


Advertisement