மூளைச்சாவு அடைந்த ஆரணி விவசாயியின் உடல் உறுப்புக்கள் தானம்.. 3 பேருக்கு மறுவாழ்வு.!

மூளைச்சாவு அடைந்த ஆரணி விவசாயியின் உடல் உறுப்புக்கள் தானம்.. 3 பேருக்கு மறுவாழ்வு.!



Tiruvannamalai Arani Died Farmer Organ Donated by Family

விபத்தில் மூளைச்சாவு அடைந்த விவசாயியின் உடல் உறுப்புக்கள் குடும்பத்தினாரால் தானம் செய்யப்பட்டு, அதனால் 3 பேருக்கு வாழ்க்கை கிடைத்துள்ள நெகிழ்ச்சி நிகழ்வு ஆரணி அருகே நடந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி, குடிசைக்கரை கிராமத்தில் வசித்து வந்தவர் பழனி (வயது 58). இவர் விவசாயியாக இருந்தார். ஆரணி அருகே கடந்த 30 ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் பழனி சென்றுகொண்டு இருக்கையில், லாரி மோதி படுகாயம் அடைந்தார். 

இரத்த வெள்ளத்துடன் பலத்த காயத்துடன் மீட்கப்பட்ட பழனி ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை மூளைச்சாவு அடைந்தார்.

Tiruvannamalai

இதனையடுத்து, பழனியின் உறவினர்கள் அவரின் உடலுறுப்புகளை தானம் செய்ய முன்வரவே, பழனியின் கல்லீரல், சிறுநீரகம் போன்றவை எடுக்கப்பட்டது. கல்லீரல் சென்னையில் உள்ள குமரன் மருத்துவமனை நோயாளிக்கும், சிறுநீரகம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை நோயாளிக்கும், மற்றொரு சிறுநீரகம் சி.எம்.சி மருத்துவமனை நோயாளிக்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது. 

பழனியின் மகன் ரஞ்சித் குமார் பெரிய கொழப்பலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதுகலை ஆசிரியராக பணியாற்றி வருகிறார், மற்றொரு மகன் ரகுபதி விவசாயத்தை கவனிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.