வேன் - சிலிண்டர் லாரி மோதி விபத்து; ஓட்டுநர் நிகழ்விடத்திலேயே பரிதாப பலி., நண்பர் படுகாயம்.!Tiruppur Van Cylinder Lorry Accident 

 

தூத்துக்குடி நகரில் இருந்து சரக்கு வேன் கோவை நோக்கி பயணம் செய்தது. வேனை திருச்செந்தூரை சேர்ந்த சின்னதுரை என்பவரது மகன் சொர்ணவேல்  (வயது 30), ஏசுதாஸ் என்பவரின் மகன் ரமேஷ் கோபி (வயது 25) ஆகியோர் இயக்கியுள்ளார். 

திருப்பூர் பொங்கலூர் பிரிவில் காலை 6 மணி அளவில் இவர்களின் வாகனம் வந்து கொண்டிருந்த நிலையில், கோவையில் இருந்து கரூருக்கு சமையல் கேஸ் பாரம் ஏற்றி வந்த லாரி கண்ணிமைக்கும் வேனின் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது. 

Tiruppur

இந்த விபத்தில் வேனின் முன்புறம் அப்பளம் போல நொறுங்கியது. விபத்தில் சொர்ணவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட, ரமேஷ் கோபி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.