காதல் திருமணம்.. பணம் தீர்ந்ததும் பரிதவிப்பு.. இளம் காதல் ஜோடி பேருந்து நிலையத்தில் தற்கொலை முயற்சி.!

காதல் திருமணம்.. பணம் தீர்ந்ததும் பரிதவிப்பு.. இளம் காதல் ஜோடி பேருந்து நிலையத்தில் தற்கொலை முயற்சி.!


tiruppur-palladam-love-couple-suicide-attempt-on-kanyak

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில், வடசேரி பேருந்து நிலையம் எப்போது பரபரப்புடன் காணப்படும் பகுதி ஆகும். நேற்று இரவு 11 மணியளவில் திருநெல்வேலி செல்லும் பேருந்து நிற்கும் இடத்தில், இளம்பெண் மற்றும் வாலிபர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். 

இதனைக்கண்ட பயணிகள் வடசேரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இருவரையும் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இருவரிடமும் நடந்த விசாரணையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடத்தை சேர்ந்த அஜித் குமார் மற்றும் பிரீத்தி என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்த நிலையில், பெற்றோர் எதிர்பால் கடந்த 4 ஆம் தேதி ரகசிய திருமணம் செய்து இருக்கின்றனர். 

அதனைத்தொடர்ந்து, கன்னியாகுமரிக்கு வந்த காதல் ஜோடி விடுதியில் அறையெடுத்து தங்கி அங்குள்ள பல இடங்களுக்கு சென்றுள்ளது. கையில் குறைந்தளவே பணம் இருந்ததால், மேற்படி என்ன செய்வது? எங்கு செல்வது? என்ற எண்ணம் மேலோங்க, மேலோகம் சென்றிடலாம் என்ற விபரீத எண்ணத்திற்கு சென்று தற்கொலை முயற்சி நடந்துள்ளது அம்பலமானது.

இந்த விஷயம் தொடர்பாக காதல் ஜோடியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் குமரிக்கு விரைந்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.