என்னது.. சினிமாவில் இருந்து விலக இதுதான் காரணமா.! வெளிப்படையாக போட்டுடைத்த நடிகை ரம்பா.!
கடன் வாங்கியவரின் தோழி வீட்டிற்கு சென்று தொந்தரவு.. கத்தியால் பதில்சொன்ன கணவன்..!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலையில் வசித்து வருபவர் முருகானந்தம் (வயது 36). இவர் எலக்ட்ரீஷியனாக பணியாற்றி வருகிறார். இதே பகுதியை சேர்ந்த சிவா என்பவருக்கு, முருகானந்தம் ரூ.5 ஆயிரம் கடன் கொடுத்துள்ளார்.
கடனை வசூலிக்க வி.ஜி. ராவ் நகரில் இருக்கும் சிவாவின் வீட்டிற்கு முருகானந்தம் சென்ற நிலையில், சிவாவின் மனைவியுடைய தோழி வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் சிவா மற்றும் அவரின் மனைவி குறித்து எனக்கு ஏதும் தெரியாது என்று தெரிவித்துள்ளார்.
இதனை நம்பாத முருகானந்தம், அவ்வப்போது சிவாவுடைய மனைவியின் தோழி வீட்டிற்கு சென்று தொந்தரவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார். இந்த விஷயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண்மணி, தனது கணவர் முகமதுவிடம் தகவலை தெரியப்படுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த முகமது முருகானந்தம் வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படவே, முகமது மறைத்து எடுத்துச்சென்ற கத்தியை வைத்து முருகானந்தத்தை குத்திவிட்டு தப்பி சென்றுள்ளார்.
இதனால் பயமடைந்த முருகானந்தத்தை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில், இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.