திருப்பூர் பேருந்து நிலையத்தில் இளைஞர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் இளம்பெண்கள்! அதிரவைக்கும் காரணம்!



tiruppur-bus-stand-women-trap

தொழில்நகராக விளங்கும் திருப்பூர் தினமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களால் பரபரப்பாக இயங்குகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் நகரத்தின் பேருந்து நிலையம் பல்வேறு மாநில இளைஞர்களால் குவிந்திருக்கும் சூழல் உருவாகிறது. ஆனால், இதே இடத்தில் தற்போது அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் அரங்கேறி வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இளம் பெண்களின் அதிர்ச்சி செயல்

பேருந்து நிலையம் அருகே இரவு நேரங்களில் செல்லும் இளைஞர்களிடம், திடீரென சில பெண்கள் நெருங்கிச் சென்று, "ஏ, ஒரு நிமிஷம்!" என அழைத்து, நேரடியாக கட்டிப்பிடித்து முகத்தில் முத்தமிடும் காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இளைஞர்கள் அதிர்ச்சியில் தப்பிச் செல்ல முயலும்போதும், பெண்கள் மீண்டும் விரட்டி இனிய வார்த்தைகளால் மயக்க முயற்சிக்கின்றனர்.

காதலா? மோசடியா?

சமீபத்தில் சிசிடிவி காட்சிகளிலும் பதிவான இந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது உண்மையான காதல் வெளிப்பாடா அல்லது மோசடிக்கு முகமூடியாக இருக்கிறதா என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது. சேலை, சுடிதார், ஜீன்ஸ் என பல்வேறு உடைகளில் இளம் பெண்கள் சுற்றித் திரிந்துகொண்டிருப்பது பொதுமக்களை சந்தேகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: வேகத்தடையை கடந்த ஆம்புலன்ஸ்! திடீரென கீழே விழுந்த நோயாளி! அதிர்ச்சியான வாகன ஓட்டிகள்! பதறவைக்கும் சம்பவம்...

மோசடி குற்றச்சாட்டு

புதிதாக வேலைக்காக நகருக்கு வரும் இளைஞர்களை குறிவைத்து இவர்கள் முதலில் நட்பாக பழகி, பின்னர் விபச்சாரத்திற்கு அழைக்கும் முயற்சி செய்கிறார்கள் என கூறப்படுகிறது. சிலர் அச்சத்தில் தப்பிச் செல்கின்றனர். ஆனால் சிலர் வலையில் சிக்கி, விடுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பணத்தை இழக்கிறார்கள். பலர் போலீசில் புகார் கொடுக்கவும் தயங்குவதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

திருப்பூர் பேருந்து நிலையம் போன்ற முக்கிய இடத்திலேயே இத்தகைய சம்பவங்கள் நிகழ்வது பொதுமக்களை கடும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் விரைவாக எடுக்க வேண்டும் என்பதே மக்கள் கோரிக்கையாக உள்ளது.

 

இதையும் படிங்க: பஸ் ஸ்டாண்டில் ஃபுல் போதையில் தன்னை மறந்து இளம் பெண் செய்த செயல்! முகம் சுளித்த பயணிகள்... ஈரோட்டில் அரங்கேறிய அதிர்ச்சி!