கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்ட 16 வயது சிறுமி பரிதாப பலி; பெற்றோரின் அலட்சியத்தால் நடந்த சோகம்.. கல்லூரி மாணவர் கைது.!Tiruppur 16 Age Minor Girl Died After Taking Abortion Tablet 

File Pic

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 16 வயது சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருக்கிறது. அவரின் பெற்றோர் சிறுமியை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தபோது, சிறுமி கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதனால் அதிர்ந்துபோன சிறுமியின் பெற்றோர், கர்ப்பத்தை கலைக்க முடிவெடுத்துள்ளனர். இதனையடுத்து, கோவில்வழி முத்தனபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் மருந்தகத்தில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சிறுமிக்கு கொடுத்து இருக்கின்றனர். 

மாத்திரையை சாப்பிட்ட சிறுமி அதிக இரத்தப்போக்கு காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார். பதறிப்போன பெற்றோர் சிறுமியை திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்த நிலையில், கடந்த ஜூன் 27ம் தேதி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். 

Tiruppur

இந்த விஷயம் தொடர்பாக நல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, அதிகாரிகள் விசாரணை செய்ததில் சிறுமி கருக்கலைப்பு மாத்திரை சாப்பிட்டது உறுதியானது. மாவட்ட மருத்துவ திட்ட ஒருங்கிணைப்பாளருக்கு தகவல் தெரியவந்து, அவர் மருந்தகத்தில் சோதனை செய்து அதற்கு சீல் வைத்தார். 

முதற்கட்ட விசாரணையில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இன்றி கருக்கலைப்பு மாத்திரை கொடுத்ததும், காலாவதியான மாத்திரை விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்ததும் அம்பலமானது. மேலும், சிறுமியை காதலின் பேரில் பலாத்காரம் செய்த ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த கல்லூரி 19 வயது கல்லூரி மாணவரை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.