#Breaking: அதிமுக நிர்வாகி ஓடஓட வெட்டிக்கொலை; இரயில் நிலையத்தில் துள்ளத்துடிக்க நடந்த பயங்கரம்..! தென் தமிழகமே அதிர்ச்சி.!



Tirunelveli Pettai Railway Station Subway AIADMK Supporter Killed 

 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேட்டை இரயில் நிலையத்தில், நேற்று அதிமுக பிரமுகர் பிச்சை (வயது 52) என்பவர் தனது வீட்டிற்கு செல்ல சுரங்கப்பாதை வழியே நடந்து சென்றுகொண்டு இருந்தார். 

அப்போது, அவரை இடைமறித்த மர்ம கும்பல், முன்னதாக கொலை திட்டத்துடன் இருந்து அதனை நிறைவேற்றியது. உயிர் பிழைக்க பிச்சை ஓட முயற்சித்தும், அவரை துரத்தி சென்று படுகொலை சம்பவம் அரங்கேற்றப்பட்டது. 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், பிச்சையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

Breaking

கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பிச்சை பேட்டை பகுதியின் முன்னாள் பஞ்சாயத்து துணைத் தலைவர் ஆவார். வார்டு கவுன்சிலர் தேர்தலுக்கும் போட்டியிட்டுள்ளார். 

இதனால் அவர் தேர்தல் முன்பகை காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடந்து வருகிறது.