நெல்லையில் பதற்றம்.. பாஜக முக்கிய பிரமுகர் 6 பேர் கும்பலால் துள்ளத்துடிக்க வெட்டிக்கொலை..!

நெல்லையில் பதற்றம்.. பாஜக முக்கிய பிரமுகர் 6 பேர் கும்பலால் துள்ளத்துடிக்க வெட்டிக்கொலை..!



Tirunelveli Palayankottai BJP Supporter Murder 


திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை, முளிக்குளம் விரல் மீண்ட நயனார் தெருவில் வசித்து வருபவர் செல்லையா. இவரது மகன் ஜெகன் (வயது 34). பாரதிய ஜனதா கட்சியில் மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். 

நேற்று இரவில் தனது மோட்டார் சைக்கிளில் முளிக்குளம், சுடலை மாடசாமி கோவில் வாய்க்கால் பாலத்திற்கு சென்று, தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அந்த சமயம் அங்கு இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல், ஜெகனை சுற்றிவளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டி தப்பி சென்றது. 

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த உள்ளூர் மக்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு ஜெகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

tirunelveli

சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த நெல்லை மாவட்ட காவல் உதவி ஆணையர், பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான அதிகாரிகள் நிகழ்விடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணியில் ஜெகனின் மீது நெல்லை மாநகர பகுதியில் இருக்கும் காவல் நிலையத்தில் குற்றவழக்கு புகார்கள் இருந்துள்ளன.

இதனால் அவர் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற சந்தேகம் எழுந்தது. தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிய நிலையில், ஆறு பேரை சந்தேகத்தின் பெயரில் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஜெகன் பாஜக கட்சியில் நிர்வாகியாக இருந்து சமீபகாலமாகவே பிரமுகராக காட்டிக்கொண்ட நிலையில், எதிர் தரப்பு கொலை செய்ததா? அல்லது கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் தொடர்பாக கடந்த ஆண்டு கோவில் திருவிழாவில் தகராறு நடந்த விஷயத்தில் கொலை நடந்ததா? என பல கோணங்களில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் லேசான பரபரப்பு சூழல் நிலவி வருவதால், பாதுகாப்பு கருதி காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.