கண்ணிமைக்கும் நேரத்தில்.. எதிர்திசையில் வந்து பயங்கரமாக மோதல்.. 2 மருத்துவக்கல்லூரி மாணவிகள் பலி.!Tirunelveli Medical College Students 2 Girl and Another 1 Died Road Accident

சாலை விபத்தில் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரியில் பயின்று வந்த 2 மாணவிகள் உட்பட 3 பேர் பரிதாபமாக பலியாகினர்.

திருநெல்வேலி மருத்துவக்கல்லூரியில் 4 ஆம் வருடம் பயின்று வரும் 3 மாணவிகள், திருநெல்வேலியில் இருந்து இருசக்கர வாகனத்தில் ரெட்டியார்பட்டி நான்கு வழிச்சாலையில் சென்று கொண்டு இருந்தனர். இதன்போது, ரெட்டியார்பட்டி மலை அருகே செல்கையில், எதிர்புறம் நாகர்கோவிலில் இருந்து தூத்துக்குடி சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் தடுப்பை உடைத்து மாணவிகள் மீது மோதியுள்ளது. 

tirunelveli

இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த தென்காசி மாவட்டம் ஆவுடையானூர் பகுதியை சார்ந்த திவ்ய காயத்ரி (வயது 21), மதுரை பரசுரம்பேட்டையை சார்ந்த பிரிடா ஏஞ்சலின் ராணி ஆகிய 2 மாணவிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒரு மாணவி மற்றும் காரில் பயணம் செய்த 3 பேர் என மொத்தமாக 4 பேர் படுகாயம் அடைந்து இருந்தனர். 

tirunelveli

இவர்கள் அனைவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யவே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காரில் பயணித்த சண்முகசுந்தரம் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.