முடிவுக்கு வரும் மாஞ்சோலை சகாப்தம்; கண்ணீருடன் வெளியேறும் தேயிலை தொழிலாளர்கள்.!Tirunelveli Manjolai Workers Out now 

இயற்கை எழில்கொஞ்சும் கிராமம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாஞ்சோலை, மேற்குத்தொடர்ச்சி மலைமீது அமைந்துள்ள சிற்றூர் ஆகும். இந்த ஊருக்கு செல்ல வனத்துறை அனுமதி என்பது அவசியம். அதேபோல, மாஞ்சோலை கிராமம், இயற்கை எழில்கொஞ்சும் இடம் என்பதால், வனத்துறை அனுமதிபெற்று சுற்றுலாவும் சென்று வரலாம். 

நில குத்தகை முடிவுக்கு வந்தது

அங்கு செயல்பட்டு வந்த தேயிலை கம்பெனியை நம்பி ஆண்டாண்டுகளாய் பல குடும்பங்கள் அங்கேயே தங்கியிருந்து பிழைப்பு நடத்தி வந்தன. இதனிடையே, 99 ஆண்டுகால நில குத்தகை தேயிலை நிறுவனத்திற்கு முடிவுக்கு வந்தது. அதேபோல, மாஞ்சோலை கிராமம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வருவதால், அங்கிருந்த மக்களை வெளியேற்றும் பணியும் நடந்து வந்தது. 

இதையும் படிங்க: #Breaking: நெல்லையப்பர் கோவில் தேரோட்ட திருவிழா: நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

மாஞ்சோலை கிராமத்தில் அமைந்துள்ள தேயிலை கம்பெனி தற்போது மூடப்பட்டு, மாஞ்சோலை கிராமத்தில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். வனத்துறை அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து ஓய்வு கொடுத்து பணியாளர்கள் அனுப்பி வைக்கப்படுவதால், சொர்க்கம் போல வாழ்ந்த வாழ்க்கையை இழந்து பலரும் கண்ணீருடன் வேறு இடங்களுக்கு குடிபெயருகின்றனர். 

இதையும் படிங்க: கோவையை மையப்படுத்தி வானில் ரசாயனங்கள் தெளிக்கப்படுகிறதா? - பதறவைக்கும் தகவலை கூறும் நபர்.. நிலவரம் என்ன?..!