தோழன் என நம்பியும் ஜி பே பாஸ்வேர்ட் ஷேர் பண்ணிடாதீங்க.. நெஞ்சை ரணமாக்கும் துரோக வலி.!Tirunelveli Kallidaikurichi Friend Cheated Another one Using G Pay Money Transfer

ஜி பே மூலமாக நண்பன் தனது நண்பனுக்கே தெரியாமல் ரூ.2 இலட்சம் பணத்தை திருடிய சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கல்லிடைகுறிச்சியில் வசித்து வருபவர் கணேச கண்ணன். அங்குள்ள அயன் சிங்கம்பட்டியில் வசித்து வருபவர் சரவணன். இவர்கள் இருவரும் நெடுநாள் நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இதில், சரவணன் பழைய வாகனங்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். 

இவரின் தொழிலில் நஷ்டம் ஏற்படவே, கணேச கண்ணனிடம் ரூ.10 இலட்சம் வங்கியில் கடன்பெற்றுத்தர சரவணஙகோரிக்கை வைத்துள்ளார். ஆனால், கணேச கண்ணன் கடன்பெற்றுத்தர மறுப்பு தெரிவித்ததால், சரவணன் நண்பரின் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார். 

சமீபத்தில் கணேசகண்ணன் சரவணனிடம் தனது செல்போனை கொடுத்து டேட்டா பேக் ரீசார்ஜ் செய்ய கூறியுள்ளார். அந்த சமயத்தில் கணேச கண்ணனின் வங்கி எண் போன்றவற்றை சேகரித்து வைத்துள்ளார். பின்னர், கணேசனின் செல்போன் சிம்மை செயலிழக்க செய்து, புதிய சிம் வாங்கி ஜி பே மூலமாக நண்பனின் பணத்தை திருடியுள்ளார். 

G Pay

ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலமாக சரவணன் கடன் வாங்கிய நபர்களுக்கு ரூ.2 இலட்சத்து 21 ஆயிரம் அனுப்பி இருக்கிறார். வங்கியில் இருந்து மாயமாக பணம் திருப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்த கணேசகண்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

இந்த புகார் சைபர் கிராம் காவல் துறையினருக்கு மாற்றி உத்தரவிடப்பட்டு நிலையில், விசாரணையில் கணேச கண்ணனின் பணத்தை ஏமாற்றியது நண்பர் சரவணன் என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.1 இலட்சத்து 32 ஆயிரம் பணம் மீட்கப்பட்டு கணேச கண்ணனிடம் ஒப்படைக்கப்பட்டது. 

தோள்கொடுத்த தோழனே துரோகியாக மாறிப்போன வருத்தம் கணேச கண்ணனை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.