தமிழகம்

திமுக பிரமுகர் வீட்டு வாசலில் வெட்டி கொலை.. இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியான உயிர்.!

Summary:

திமுக பிரமுகர் வீட்டு வாசலில் வெட்டி கொலை.. இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியான உயிர்.!

திருநெல்வேலி மாநகராட்சி 38 ஆவது வார்டு பகுதியில் வசித்து வருபவர் பொண்ணுதாஸ் என்ற மணி. இவர் திமுக செயலாளராக இருந்து வருகிறார். அப்பகுதியில் ஆட்டோ ஒர்க் ஷாப்பும் நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று 11 மணியளவில் பாளையங்கோட்டையில் உள்ள வீட்டு அருகே மணி நின்று கொண்டு இருக்கையில், அங்கு வந்த மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 

அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த மணியின் தாயார் பேச்சியம்மாள் அக்கம் பக்கத்தினரை அழைக்கவே, ஆட்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் மர்ம கும்பல் தம்பி சென்றது. பின்னர், அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், மணியின் கொலைக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மதுபான கடை பார் ஏலம் எடுப்பதில் முன்விரோதம் ஏற்பட்டு மணி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும், உள்ளாட்சி தேர்தலில் துணை மேயர் பதவிக்கு மணி போட்டியிட முயற்சித்து வந்த நிலையில் அதனால் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. 


Advertisement