நெல்லையில் மீண்டும் பயங்கரம்; பட்டியலின இளைஞர் மீது சிறுநீர் கழித்து, பணம் பறித்து கும்பல் அதிர்ச்சி செயல்.!

நெல்லையில் மீண்டும் பயங்கரம்; பட்டியலின இளைஞர் மீது சிறுநீர் கழித்து, பணம் பறித்து கும்பல் அதிர்ச்சி செயல்.!


tirunelveli-dalit-youngsters-tortured-by-upper-caste-ca

 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பட்டியலின இளைஞர்கள் இரண்டு பேரை, 6 பேர் கொண்ட கஞ்சா போதை கும்பல் கொடுமை செய்துள்ளது. இளைஞர்களை நிர்வாணப்படுத்திய கும்பல், அவர்களின் மீது சிறுநீர் கழித்து, அவர்களின் பணம் ரூ.5 ஆயிரம் மற்றும் செல்போனை பறித்துள்ளது.

இரண்டு இளைஞர்களும் சென்றுகொண்டிருந்தபோது, 6 பேர் கும்பல் அவர்களிடம் ஜாதியை கேட்டு பின் தாழ்த்தப்பட்டவர் என்பதை தெரிந்துகொண்டு இச்செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

கஞ்சா போதையில் அட்டகாசம் செய்த 6 இளைஞர்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, புகாரை ஏற்ற அதிகாரிகள் ஆறு பேரையும் கைது செய்தனர். 

விசாரணையில், மணி முத்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த 2 இளைஞர்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கச்சென்றபோது துயரம் நடந்துள்ளது தெரியவந்தது. காலையில் சென்றவர்கள் மாலை வரை சித்ரவதைபடுத்தப்பட்டனர். 

இவர்களை காணாது தேடிவந்த ஊர் மக்கள் இரண்டு பட்டியலின இளைஞர்களையும் மீட்டனர். அவர்களுக்கு இக்கொடுமையை ஏற்படுத்திய பொன்மணி (வயது 25) வயது, நல்லமுத்து (வயது 21), ராமர்(வயது 22), சிவா(வயது 22), லட்சுமணன் (வயது 20), 19 வயதுடைய நபர்கள் என 6 பேரை கைது செய்தனர்.

ஏற்கனவே தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் பகுதியில் உள்ள கிராமத்தில், பட்டியலின சிறுவர்களுக்கு கடையில் பொருட்கள் வழங்க மறுத்த மளிகைக்கடைக்காரரின் வீடியோ வெளியாகி, அவருக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையில் மேற்கூறிய சம்பவம் நடந்துள்ளது.

அதேபோல, ஏற்கனவே திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பட்டியலினத்தவருக்கு எதிராக கடுமையான தாக்குதல், கொலை போன்ற வன்முறை செயல்களும் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கவை.