அரசுப்பேருந்தின் சக்கரத்தில் சிக்கி நீதிமன்ற ஊழியர் பரிதாப பலி; நெல்லையில் சோகம்.. நெஞ்சை ரணமாக்கும் காட்சிகள்.!Tirunelveli Court Employee Died an Accident 

 

சாலையில் சுற்றித்திரியும் மாடு, நீதிமன்ற ஊழியருக்கு எமனான சோகத்தை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேட்டை, தங்கம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் வேலாயுதராஜ் (58). இவர் நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், இளநிலை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை தனது இருசக்கர வாகனத்தில் வண்ணாரப்பேட்டை, தெற்கு புறவழிச்சாலையில் சென்றுகொண்டு இருந்தார். 

இதையும் படிங்க: பள்ளிக்கு செல்லவிருந்த மகன் கண்முன் துள்ளத்துடிக்க உயிரிழந்த தந்தை; தர்மபுரியில் சோகம்.!

பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பலி

அப்பகுதியில் நான்கு வழிப்பாதை பணிகள் நடைபெற்று வருவதால், ஒருவழிப்பாதையாக வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. இந்நிலையில், வேலாயுதராஜ் தனது வாகனத்தில் சென்றபோது, சாலையில் சுற்றித்திரிந்த மாடு ஒன்று வேலாயுதராஜின் மீது மோதியது. இதில் வாகனத்தில் இருந்து நிலைதடுமாறி விழுந்தவர், அவ்வழியே நெல்லையில் இருந்து குமுளி நோக்கி பயணித்த பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

பதைபதைப்பு காட்சிகள் வைரல்

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், வேலாயுதராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், அவர் பலியானதன் பதைபதைப்பு காணொளியும் கிடைக்கப்பட்டது. 

நகரின் பல்வேறு பகுதிகளில் சுற்றித்திரிந்த மாடுகள் காரணமாக விபத்து நடந்துள்ளது தெரியவந்துள்ளதால், மாடுகளை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: நாயின் மீது பரிதாபப்பட்டதால் நடந்த சோகம்; 3 பேருக்கு காயம்.. பதைபதைப்பு காணொளி உள்ளே.!