பள்ளிக்கு செல்லவிருந்த மகன் கண்முன் துள்ளத்துடிக்க உயிரிழந்த தந்தை; தர்மபுரியில் சோகம்.!Dharmapuri Man Died in Accident 

 

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மான்காரன்கொட்டாய் பகுதியில் வசித்து வருபவர் சின்னசாமி (வயது 36). இவர் சம்பவத்தன்று தனது மகனை பள்ளிக்கு அழைத்துசென்றுவிட இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துள்ளார். 

அச்சமயம், மகன் தனக்கு ஜாமண்டரி பாக்ஸ் வேண்டும் என கேட்டு இருக்கிற. இதனால் சேலைக்கொட்டாய் பகுதியில் உள்ள கடைசியில் சின்னசாமி வாகனத்தை நிறுத்தி இருக்கிறார். அங்குள்ள கடையில் ஜாமென்டரி பாக்ஸ் வாங்க சென்றுள்ளார். 

இதையும் படிங்க: நாயின் மீது பரிதாபப்பட்டதால் நடந்த சோகம்; 3 பேருக்கு காயம்.. பதைபதைப்பு காணொளி உள்ளே.!

நொடியில் நடந்த சோகம்

சாலையை கடக்க நடைமேடையில் நின்றபோது, அவ்வழியாக தனியார் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சின்னசாமியின் மீது மோதி விபத்திற்குள்ளானது. நொடியில் நடந்த விபத்தில், சின்னசாமி பரிதாபமாக உயிரிழந்தார். 

நிகழ்விடத்திலேயே துள்ளத்துடிக்க உயிரிழந்த சின்னசாமி மகனின் முன்பு உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சின்னசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: தலைகுப்பற கவிழ்ந்த டிராக்டர்; கணவர், பச்சிளம் குழந்தை முன் தாய் துள்ளத்துடிக்க பலி.!