இருசக்கர வாகனத்தில் ட்ரிப்பிள்ஸ்.... எதிரே வந்த தனியார் பேருந்து.! நொடியில் போன 3 உயிர்.!

இருசக்கர வாகனத்தில் ட்ரிப்பிள்ஸ்.... எதிரே வந்த தனியார் பேருந்து.! நொடியில் போன 3 உயிர்.!


three people died in accident

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள மருதத்தூரை சேர்ந்த கருப்புசாமி என்பவர் தனது மனைவி மற்றும் மைத்துனருடன் தனது இருசக்கர வாகனத்தில் பூலாம்பாடியில் உள்ள அவரது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் ஏ.அகரம் அருகே சென்றபோது சாலையின் எதிரே வந்த பஸ் மீது அவரது இருசக்கர வாகனம் மோதியுள்ளது.

இந்தவிபத்தில் கருப்புசாமி அவரது மனைவி செல்வராணி மற்றும் அவரது மைத்துனர் ஆறுமுகம் ஆகிய 3 பேரும் இரு சக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதில், பலத்த காயமடைந்த கருப்புசாமி மற்றும் அவரது மைத்துனர் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

பலத்த காயமடைந்த கருப்புசாமியின் மனைவி செல்வராணியை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் செல்வராணியும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.