தமிழகம்

அடுத்தடுத்து இறந்து விழுந்த மூன்று மாடுகள்! இறப்பு குறித்து வெளியான அதிர்ச்சி காரணம்!

Summary:

Three cows dead in trichy

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே விவசாயி ஒருவரின் மூன்று மாடுகள் அடுத்தடுத்து உயிர் இழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், துறையூர் அருகே அழகாபுரியைச் சேர்ந்தவர் குப்பன் மகன்
வீராசாமி(47).

இவர் தனக்கு சொந்தமான மூன்று மாடுகளை கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது வயலில் கட்டிவிட்டு வீடு திரும்பியுள்ளார். மறுநாள் காலை, மாடுகளுக்கு தண்ணீர் வைப்பதற்காக வீரச்சாமியும், அவரது மனைவி தனலட்சுமியும் வயலுக்கு சென்று மாடுகளுக்கு தண்ணீர் வைத்துள்ளனர்.

அவர்கள் வைத்த தண்ணீரை அருந்திய மூன்று மாடுகளும் அடுத்தடுத்து மயங்கி விழுந்துள்ளது. பதறிப்போன வீராச்சாமி கால்நடை மருத்துவர் ஒருவருக்கு போன் செய்து மாடுகளை பரிசோதிக்க கூறியுள்ளார். மாடுகளை பரிசோதித்த மருத்துவர், மாடுகள் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும், மாடுகள் குடித்த தண்ணீரில் விஷம் கலந்திருக்கலாம் என கூறியுள்ளார்.

இதனை அடுத்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்த வீராச்சாமி: உப்பிலியபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த அழகாபுரி ஊராட்சி தலைவராக
தேர்வான கு. செல்லதுரைக்காக தான் தேர்தல் பணியாற்றியதாகவும், அவர் வெற்றிப்
பெற்றதை பொறுத்துக் கொள்ள முடியாத தேர்தலில் தோற்றுப்போன வேட்பாளரில் யாரோ ஒருவர் தான் தனது மாடுகள் குடிக்கிற தண்ணீரில் விஷம் கலந்திருக்கலாம் என்றுக் கூறியிருந்தார்.

பின்னர், போலீசாரின் அறிவுறுத்தல் படி மூன்று மாடுகளும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் புதைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகே மாடுகள் இறக்க என்ன காரணம் என தெரியவரும் என போலீசார் கூறியுள்ளனர்.


Advertisement