குழந்தைங்க பள்ளிக்கூடம் போக முடியல..! ஜாமான் வாங்க முடியல..! ஊரை விட்டே ஒதுக்கிட்டாங்க..! பட்டப்பகலில் பாட்டி செய்த செயல்..!
குழந்தைங்க பள்ளிக்கூடம் போக முடியல..! ஜாமான் வாங்க முடியல..! ஊரை விட்டே ஒதுக்கிட்டாங்க..! பட்டப்பகலில் பாட்டி செய்த செயல்..!

தூத்துக்குடி மாவட்டம் நக்கலைக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முத்தல்ராஜ். இவர் அதேபகுதியை சேர்ந்த தனசேகரன் எனபவருக்கு சொந்தமான இடத்தை விலைக்கு வாங்கியுள்ளார். ஆனால், அந்த இடத்தை ஊர் பயன்பாட்டிற்காக பொதுமக்கள் ஒன்றாக சேர்ந்து வாங்குவதாக திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே, ஊர் கட்டுப்பாட்டை மீறி முத்தல்ராஜ் அந்த இடத்தை விலைக்கு வாங்கியதால் அவரது குடும்பம் உட்பட அவரது உறவினர்கள் மொத்தம் 6 குடும்பத்தை கிராம மக்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். இந்த விவகாரம் குறித்து முத்தல்ராஜ் மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாச்சியர் என பல தரப்பில் முறையிட்டும், பேச்சு வார்த்தை நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை என கூறப்படுகிறது.
மேலும், ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதால், கடைகளில் பொருட்கள் வாங்க முடியவில்லை, குழந்தைகள் பள்ளிக்கு செல்ல ஆட்டோவில் ஏற அனுமதி இல்லை, உள்ளூர் விழாக்களில் கலந்துகொள்ள முடியவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதனை அடுத்து ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறி முத்தல்ராஜின் சகோதரி சண்முகவேல் தாய் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஊரை விட்டு ஒதுக்கி வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூறி காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி சண்முகவேல் தாய் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலம் முன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.