திருச்செந்தூரில் சண்முகார்ச்சனைக்கு கட்டணமாக ரூ.5 ஆயிரம்.. அமலானது அதிரடி உத்தரவு.!

திருச்செந்தூரில் சண்முகார்ச்சனைக்கு கட்டணமாக ரூ.5 ஆயிரம்.. அமலானது அதிரடி உத்தரவு.!


Thoothukudi Thiruchendur Temple Sanmuga Archanai

 

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சண்முக அர்ச்சனைக்கு கடந்த 1995ஆம் ஆண்டு முதல் கட்டணமாக ரூபாய் 1500 வசூல் செய்யப்பட்டு வந்தது. 

இந்த நிலையில், இந்த கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்று சமீபத்தில் கோவில் நிர்வாகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில், கட்டணம் ரூபாய் 5000 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. 

Thoothukudi

இது குறித்த ஆட்சேபனை கருத்துக்கள் ஏதும் வராததால் கோவில் அறங்காவலர் குழு. இந்து சமய அறநிலைத்துறை உத்தரவின் பெயரில் சண்முகா அர்ச்சனைக்கு ரூபாய் 5000 கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்த கட்டணமானது இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.