தாயின் இரண்டாவது கணவனால் 2 வயது பச்சிளம் பிஞ்சு சுவற்றில் அடித்தே கொலை.. பதைபதைக்க வைக்கும் துயரம்.!thoothukudi-thalamuthu-nagar-2-aged-child-killed-by-mot

கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்த பெண்மணிக்கு மற்றொருவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவர் இறுதியில் குழந்தைக்கு எமனமாக அமைந்த சோகம் நடந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாளமுத்து நகர், மேற்கு காமராஜர் தெருவில் வசித்து வருபவர் கிஷோர். இவரின் மனைவி செபி (வயது 28). தம்பதிகளுக்கு கிறிஸ்டினா (வயது 5), கேத்ரினா (வயது 2) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர். 

இந்நிலையில், கணவன் - மனைவி பிரச்சனை காரணமாக கடந்த வருடத்தில் கணவரை பிரிந்த செபி குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார். இவர் இதே பகுதியில் செயல்பட்டு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். 

Thoothukudi

இவருக்கும், தாளமுத்து நகரில் வசித்து வந்த டேவிட் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்படவே, இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்ததாக தெரியவருகிறது. ஆனால், இருவரும் குடும்ப சண்டையில் அவ்வப்போது ஈடுபட்டு வந்துள்ளனர். 

நேற்று இரவில் இருவருக்கும் இடையே சண்டை ஏற்படவே, ஆத்திரத்தில் டேவிட் தொழில் உறங்கிய குழந்தை கேத்ரினாவை தூக்கி சுவற்றில் அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்ற நிலையில், செபி கொடுத்த புகாரின் பேரில் தாளமுத்து நகர் காவல் துறையினர் டேவிட்டை தேடி வருகிறார்கள்.