"நான் சாதிச்சு காட்டுறேன்" - நெப்போலியனின் மகன் தனுஷ் உறுதி.!
#BigNews: மாணவரை கண்டித்த ஆசிரியயை குடும்பமே இழுத்துப்போட்டு அடித்த சம்பவம்; தூத்துக்குடியில் பரபரப்பு, அதிர்ச்சி வீடியோ வைரல்.!
பள்ளியில் படித்து வந்த மாணவனை கண்டித்த ஆசிரியர் மீது குடும்பமே தாக்குதல் நடத்திய பயங்கரம் நடந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரம், கீழ் நம்பியார் கிரமத்தில் இந்து துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் ஆசிரியராக பாரத் என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை குழந்தைகள் வழக்கம்போல பள்ளிக்கு வருகை தந்துள்ளனர். அப்போது, பள்ளியில் படித்து வரும் மாணவன் செய்த தவறை ஆசிரியர் கண்டித்து தாக்கியதாக தெரியவருகிறது.
தூத்துக்குடி ,எட்டையபுரம் அருகே நம்பியாபுரம் தொடக்கபள்ளி யில் நடந்தசம்பவம். பெற்றோர் .ஆசிரியரை அடிக்கும் காட்சி... pic.twitter.com/D26IejWfxz
— Vaalmihi journalist ( netrikkan) (@Vaalmihi2) March 21, 2023
இதுகுறித்து மாணவன் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் பள்ளிக்கூடத்திற்கு விரைந்து ஆசிரியை, ஆசிரியரை தாக்கி இருக்கிறார்கள். இந்த விஷயம் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.