குழந்தை திருமணம், 3 நாட்களில் வரதட்சணை கொடுமை.. 17 வயது சிறுமி தற்கொலை.. திருவாரூரில் சோகம்.!

குழந்தை திருமணம், 3 நாட்களில் வரதட்சணை கொடுமை.. 17 வயது சிறுமி தற்கொலை.. திருவாரூரில் சோகம்.!


Thiruvarur Child Married Girl Suicide due to Dowry Police Arrest Husband Searching 5 Others

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருகாரவாசல் கிராமத்தில் 11 ஆம் வகுப்பு பயின்று வரும் சிறுமி வசித்து வந்துள்ளார். இந்த சிறுமிக்கு கடந்த 2015 ஆம் வருடம் விழுப்புரம் மாவட்டம் ஆண்டிகுப்பம் பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபர் சிவகுமார் என்பவருடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

சிறுமியின் சித்தப்பா ஏழுமலை என்பவரின் ஏற்பாட்டின் பேரில் திருமணம் நடந்த நிலையில், திருமணம் ஆன 3 ஆவது நாளிலேயே சிறுமி சொந்த ஊருக்கு வந்துள்ளார். எள்ளலும், சிவகுமாரின் குடும்பத்தினர் சிறுமியின் பெற்றோரிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளனர். இதனால் சிறுமி மனமுடைந்து காணப்பட்டுள்ளார். 

கடந்த சில வருடமாகவே மன உளைச்சலுடன் வாழ்நாட்களை நகர்த்தி வந்த சிறுமி, தனது வாழ்க்கை சீரழிந்துவிட்டதே என எண்ணி, கடந்த 4 ஆம் தேதி குளிர்பானத்தில் விஷம் குறித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். அவர் குடித்து மீதம் வைத்திருந்த விஷம் கலந்த குளிர்பானத்தில் உண்மை தெரியாமல், சிறுமியின் தங்கையும் அதனை குடித்துள்ளார். 

thiruvarur

இதனையடுத்து, இருவரும் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்ட நிலையில், திருமணம் முடிந்த சிறுமி தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருவாரூர் மற்றும் விழுப்புரம் காவல் துறையினர் விசாரணை செய்துள்ளனர். 

விசாரணையில், சிறுமிக்கு குழந்தை திருமணம் நடந்ததும், அதனால் அவர் தற்கொலை செய்ததும் அம்பலமாகவே அவரின் சித்தப்பா ஏழுமலை, சிறுமியின் பெற்றோர், சிவகுமார், சிவகுமாரின் பெற்றோர் ஆகியோரின் மீது போக்ஸோ, குழந்தை திருமண தடை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களில் சிவகுமார் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ளோர்களை தேடி வருகின்றனர்.