வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
திருவாரூர் மக்களுக்கு தேவை தேறுதல்; தேர்தல் அல்ல; தேர்தல் ஆணையத்திற்கு தமிழிசை நன்றி.!
திருவாரூர் மக்களுக்கு தற்போது தேவை தேறுதல் தான் தேர்தல் அல்ல என்று கூறி தேர்தல் ஆணையத்தின் முடிவிற்கு நன்றி தெரிவித்துள்ளார் தமிழிசை சௌந்தர்ராஜன்.
தமிழகத்தில் பலம் வாய்ந்த அரசியல் தலைவராக இருந்து வந்த கருணாநிதி, கடந்த ஆகஸ்ட் மாதம் காலமானார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மறைவையடுத்து காலியாக அறிவிக்கப்பட்ட திருவாரூர் தொகுதிக்கு வருகிற 28-ம் தேதி இடைத்தேர்தல் என்று அறிவிக்கப்பட்டது.
முன்னாள் முதலர்வர் கருணாநிதியின் தொகுதி என்பதால் பல்வேறு கட்சிகளும் தன் வசம் அந்த தொகுதியை இழுக்க முயற்சித்து வந்தனர். இந்நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிமுகம் செய்ய தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் திமுக தனது வேட்பாளரை அறிமுகம் செய்தது.
ஆனால், கஜா புயலால் பாதிப்படைந்த மாவட்டங்களில் ஒன்றாக திருவாரூர் தொகுதியும் உள்ளது. இந்நிலையில் பாதிப்படைந்த மாவட்டங்களுக்கு அரசு சார்பாக நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் அந்த நிவாரணம் திருவாரூர் தொகுதிக்கு சென்றடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மக்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் திருவாரூர் தேர்தலை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னதாக, திருவாரூர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுவது குறித்து குழப்பம் நீடித்து வந்த நிலையில், தற்போது தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
திருவாரூர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது புயலுக்குப்பின்புஅங்கே தங்கிமருத்துவநிவாவரண பணி செய்தஅனுபவத்தில் சொல்கிறேன் திருவாரூர்மக்களுக்கு இப்போதைய தேவை தேறுதல் தான்,தேர்தல்அல்ல,அவர்கள்வாழ்வைமீட்டெடுப்பதுதான் தேவை ஓட்டெடுப்பு அல்ல,தேர்தல் ஆணையத்திற்கு நன்றி,
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiBJP) January 7, 2019
இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவிற்கு தனது ஆதரவையும் நன்றியையும் தெரிவித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துகளை பதிவிட்டுள்ளார்.