காட்டுப்பன்றியை விரட்ட வைத்த வெடியில் நாய் சிக்கி சோகம்.. தலைசிதறி உயிரிழந்த பரிதாபம்.!

மர்மப்பொருள் வெடித்ததில் வளர்ப்பு நாய் ஒன்று, தலை சிதறி பரிதாபமாக உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி அருகாமையில் புன்னை கிராமத்தில் வசித்து வருபவர் புஷ்பா. இவர் நேற்றிரவு அவரது தோட்டத்திற்கு சென்றபோது, அவரை பின்தொடர்ந்து அவரது வளர்ப்பு நாயும் சென்றுள்ளது.
இந்த நிலையில், திடீரென பயங்கரமான ஒரு சத்தம் ஏற்பட்ட நிலையில், புஷ்பா திரும்பிப் பார்த்தபோது நாய் தலை சிதறி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.
இதனால் பதறிப்போன புஷ்பா அலறியதால் அருகிலிருந்தவர்கள் அனைவரும் ஓடி வந்து பார்த்துள்ளனர். மேலும், இதுகுறித்து காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் திடீரென நாய் எவ்வாறு தலை சிதறி இருந்தது?என்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்
அப்போது விசாரணையில், கிராமத்தில் காட்டுப்பன்றியை விரட்டுவதற்காக அடிக்கடி அவுட்டுக்காய் என்ற வெடிமருந்து வைப்பது தெரியவந்துள்ளது.
இதனால் காட்டுப்பன்றியை விரட்டுவதற்காக வைக்கப்பட்ட வெடிமருந்தை கடித்து நாய் உயிரிழந்ததா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.