இரயில்வே தண்டவாளத்தை அலட்சியமாக கடந்து 2 இரயிலில் அடிபட்டு, உடல் சிதறி பலியான இளம்பெண்.! தமிழகமே சோகம்.!

இரயில்வே தண்டவாளத்தை அலட்சியமாக கடந்து 2 இரயிலில் அடிபட்டு, உடல் சிதறி பலியான இளம்பெண்.! தமிழகமே சோகம்.!


Thiruvallur Putlur Woman Died Train Hit Accident When Crossing Track Disdain

வேலைக்கு சென்ற பெண்மணி அலட்சியமாக இரயில்வே தண்டவாளத்தை கடந்த நிலையில், புறநகர் மின்சார இரயிலில் மோதி, எதிரே வந்த மற்றொரு இரயிலில் சிக்கி உடல் சிதறி உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புட்லூரை சேர்ந்தவர் ராஜேஷ். இவரின் மனைவி திவ்யா (வயது 34). இவர் திருவள்ளூரில் செயல்பட்டு வரும் அழகு நிலையத்தில் பணியாற்றி வருகிறார். 

தினமும் அழகு நிலையத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்று வருவது திவ்யாவின் வழக்கம். இந்நிலையில், நேற்று இரவு வேலையை முடித்துக்கொண்டு, வீட்டிற்கு வந்துள்ளார். 

thiruvallur

அப்போது, புட்லூரில் இருக்கும் இரயில்வே கேட்டை கடக்க முயற்சித்த போது, சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற புறநகர் இரயில் திவ்யாவின் வாகனம் மீது மோதியுள்ளது. 

இந்த விபத்தில், திவ்யா வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு, எதிரே வந்த பிருந்தாவனம் இரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த இரயில்வே காவல் துறையினர், சிதறிக்கிடந்த திவ்யாவின் உடல் உறுப்பை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.