சாமிக்கு விரதம் இருப்பவரா நீங்கள்?.. எச்சரிக்கை செய்தி உங்களுக்குத்தான்.. பரிதாபமாக பறிபோன உயிர்..! விபரீதம் வேண்டாமே..!!thiruvallur-periyapalayam-bhavani-amman-temple-woman-di

பவானியம்மன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்த வந்த பெண்மணி, நேர்த்திக்கடன் செலுத்தும்போதே மயங்கி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. 58 வயதில் சர்க்கரை வியாதியுடன் பட்டினி கிடந்து செலுத்திய நேர்த்திகடனால் பறிபோன உயிர் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையத்தில் பவானி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள பவானி அம்மனை வழிபட ஆடிமாதத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரளாக வந்து செல்வார்கள். இந்நிலையில், ஆடி முதல் வாரம் தொடங்கி 14 நாட்கள் பவானி அம்மன் கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. 

திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி சென்றனர். இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கச்சூரில் வசித்து வரும் காந்திமதி (வயது 58) என்பவர் வேப்பஞ்சேலை அணிந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினார். இவர் அம்மனுக்கு வேப்பஞ்சேலை அணிந்து கோயிலில் வலம்வந்துகொண்டு இருந்தார். 

அந்த சமயத்தில், திடீரென அவர் மயங்கி விழவே, உடன் இருந்தவர்கள் அவரை பெரியபாளையம் அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று அனுமதி செய்தனர். ஆனால், அங்கு காந்திமதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். 

thiruvallur

விசாரணையில், காந்திமதிக்கு சர்க்கரை நோய் இருந்த நிலையில், அவர் காலையில் உணவு சாப்பிடாமல் விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்த வந்துள்ளார். இதனால் அவர் நேர்த்திக்கடன் செலுத்தும்போதே மயங்கி உயிரிழந்தது அம்பலமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எந்த சாமியும் விரதம் இருந்து தன்னை வந்து தரிசிக்க கேட்பது இல்லை. நேரத்திற்கு ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு, பிறருக்கு துன்பம் இழைக்காமல் வாழ்ந்தாலே அவனின் அணுகூலத்தால் அனைத்தும் கைகூடும். இதுபுரியாமல் சர்க்கரை வியாதியுடன் விரதம் இருந்து நேத்திக்கடன் செலுத்தினால் என்ன மாதிரியான விபரீதம் ஏற்படும் என்பதற்கு இதுவே சாட்சி.

உணவை தவிர்க்காதே, பிறருக்கு துன்பம் இழைக்காதே, அனைத்து உயிரிடத்திலும் அன்புடன் இரு, ஒழுக்கம் தவறாதே, பிறர் தீங்கு இழைத்தாலும் தாங்கிக்கொள், கர்மபலன் அனைத்துக்கும் பதில் சொல்லும்..