10 ஆண்டு காதல்., பலமுறை அத்துமீறல்.. உல்லாசமாக இருந்து காதலியை கழட்டிவிட்ட கயவன்.. தரமான சம்பவம் செய்த காதலி.!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு, நெடுகல் பள்ளிக்கூட தெருவில் வசித்து வருபவர் நாகன். இவரின் மகன் ஆதிமூலம் (வயது 30). இவர் ஆக்டிங் டிரைவராக இருக்கிறார். திருத்தணியை அடுத்துள்ள புஜ்ஜிரெட்டிபள்ளியில் வசித்து வரும் பெண்ணை, கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறிய ஆதிமூலம், பெண்ணிடம் பாலியல் ரீதியாக பலமுறை அத்துமீறியுள்ளார். தற்போது திருமணம் செய்ய ஆதிமூலம் மறுப்பு தெரிவிக்கவே, பெண் தன்னை திருமணம் செய்ய கோரிக்கை வைத்தும் பலனில்லை.
இதனால் பெண்மணி திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஆதிமூலத்தை கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் புழல் சிறையில் காமுகன் அடைக்கப்பட்டுள்ளான்.