#திருப்பூர் : வாலிபால் போட்டியில் தோல்வி.. கலெக்டர் செய்த செயல்.! அதிகாரிகள் ஆச்சர்யம்.!
ஆய்வில் ஆட்சியர்
திருப்பூர் மாவட்ட ஆட்சியரான கிறிஸ்துராஜ் வட்டம் பல்லடத்திற்கு உட்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். அந்த ஆய்வின் ஒரு பகுதியாக அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் விடுதிக்கு சென்ற அவர் அந்த விடுதியை ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்த மாணவர்கள் வாலிபால் விளையாடிக் கொண்டு இருந்தனர்.
மாணவர்கள் வற்புறுத்தல்
அப்போது அவர்களுடன் கிறிஸ்துராஜ் உரையாற்றினார். தொடர்ந்து, அந்த மாணவர்கள் விளையாட அவரை அழைத்தனர். அவர்களின் வற்புறுத்தலை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரும் விளையாட முனைந்தார். கிறிஸ்துராஜ் தலைமையில் ஒரு அணியும், சக மாணவரின் தலைமையில் மற்றொரு அணியும் மோதியது.
இதையும் படிங்க: சென்னையில் பயங்கரம்... துண்டு துண்டாக வெட்டி பாலியல் தொழிலாளி படுகொலை.!! அதிர்ச்சி வாக்குமூலம்.!!
சவால் விடுத்த கலெக்டர்
போட்டி தூங்குவதற்கு முன்பு அந்த மாணவர்களிடம் கிறிஸ்துராஜ், "இந்த போட்டியில் தோல்வியடையும் அணி 10 தண்டால் எடுக்க வேண்டும்." என்று சவால் விடுத்துள்ளார். இதை இரு அணி மாணவர்களுமே ஏற்றுக்கொண்ட நிலையில் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது.
தண்டால் எடுத்த ஆட்சியர்
போட்டியின் முடிவில் கிறிஸ்துராஜ் தலைமையிலான அணி தோல்வியை தழுவியது. இதனை தொடர்ந்து, அவரும் அவரது அணியினரும் சேர்ந்து 10 தண்டால் எடுத்தனர். இது விடுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இதையும் படிங்க: கொடுமை... 17 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய அக்கா கணவர்.!! போக்சோ சட்டத்தில் கைது செய்த காவல்துறை.!!