பிரபல நடிகை எமி ஜாக்சனுக்கு திடீர்னு என்ன ஆச்சு.? இப்படி ஆகிட்டாங்களே.!
17 வயது சிறுமி 7 மாத கர்ப்பம்.. ஊராட்சி மன்ற தலைவர் மகன் வெறிச்செயல்..!
17 வயது சிறுமி 7 மாத கர்ப்பம்.. ஊராட்சி மன்ற தலைவர் மகன் வெறிச்செயல்..!

11ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவியை, 7 மாத கர்ப்பமாக்கிய ஊராட்சி மன்ற தலைவரின் மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் ராதாபுரம் அருகே இளையநயினார்குளம் பகுதியில் வசித்து வருபவர் முருகேசன். இவர் சவுந்திரபாண்டியபுரம் ஊராட்சி மன்ற தலைவராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மகன் வெங்கடேஷ் (வயது 20). இவர் ஐ.டி.ஐ படித்து மின்வாரியத்தில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்தநிலையில், வெங்கடேஷ் உவரி அருகே உள்ள ஒரு கிராமத்தில் 11ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் மாணவி கர்ப்பமடைந்த நிலையில், தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
மாணவியின் இந்தநிலை குறித்து அவரின் பெற்றோருக்கு தெரிய வர வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் வெங்கடேஷ் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது அம்பலமானதால், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.