பிரபல நடிகை எமி ஜாக்சனுக்கு திடீர்னு என்ன ஆச்சு.? இப்படி ஆகிட்டாங்களே.!
குடும்ப அட்டை இல்லாத 4000க்கும் அதிகமான திருநங்கையர்களுக்கு தமிழக அரசு வழங்கிய அதிரடி சலுகை..!
குடும்ப அட்டை இல்லாத 4000க்கும் அதிகமான திருநங்கையர்களுக்கு தமிழக அரசு வழங்கிய அதிரடி சலுகை..!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் கோரத்தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரை இந்நோயால் 480க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நேற்று வரை தமிழகத்தில் மட்டும் 3 பேர் பலியாகி உள்ளனர்.
தற்போது கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் பொருளாதாரம் இன்றி மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளதால் பல்வேறு உதவிகளையும், நிதியுதவிகளையும் வழங்கி வருகிறது.
இந்நிலையில் தற்போது திருநங்கையர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு குடும்ப அட்டை இல்லாத 4000க்கும் அதிகமான திருநங்கையர்களுக்கு 12 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகிய அத்தியாவசிய பொருட்கள் கொண்ட தொகுப்பு வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.