தமிழகம் லைப் ஸ்டைல்

மகளை அரசு அங்கன்வாடியில் சேர்த்த மாவட்ட ஆட்சியர்; குவிந்து வரும் பாராட்டுகள்.!

Summary:

thirunalvali district collecter shilpha pirabhaker

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷ் தனது 3 வயது மகளை அரசு அங்கன்வாடியில் சேர்த்துள்ளதை அடுத்து அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

பொதுவாக மத்திய, மாநில அரசுப் பணியாளர்கள் தங்களது பிள்ளைகளை அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்க வைக்க தயங்குகின்றனர். ஆனால் அவர்களின் படிப்பு முடிந்ததும் அரசுப் பணியே வேண்டும் என்று விரும்புகின்றனர். இன்னும் சிலர் அரசு பணியாளர்களுக்கான இட ஒதுக்கீடு வேண்டும் என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

Image result for shilpa prabhakar tirunelveli collector

இவ்வாறு அரசு பணியாளர்கள் மீது மக்கள் மத்தியில் ஒரு அதிருப்தி நிலவி வருகிறது.  
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருப்பவர் ஷில்பா பிரபாகா். மேலும் அவரது துணிச்சலான நடவடிக்கைகளுக்காக மக்கள் மத்தியில் நற்பெயரையும் பெற்றுள்ளார்.

Image result for shilpa prabhakar tirunelveli collector

இந்நிலையில் ஆட்சியா் ஷில்பா தனது 3 வயது மகள் கீதாஞ்சலியை பாளையங்கோட்டையில் உள்ள அரசு அங்கன்வாடி மையத்தில் சோ்த்து அரசு பணியாளா்களுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளாா். மாவட்ட ஆட்சியரின் செயலை அறிந்த பலரும் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனா். 


Advertisement