தமிழகம் சினிமா

நீங்கள் இயக்குநராகவே இயங்க வேண்டும்.! ரஜினிகாந்துக்கு திருமாவளவன் கூறிய வாழ்த்து.!

Summary:

ரஜினிகாந்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கோடிக்கணக்கான ரசிகர்களை வைத்திருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 71-வது பிறந்தநாளை நேற்று (12-12-2020) கேபிடாடினார். நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். 

இந்நிலையில் ரஜினிகாந்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நாயகன், திரைத்துறையில் இயக்குநருக்கு ஏற்ப இயங்க வேண்டும். அரசியலில் இயக்குநராகவே இயங்க வேண்டும் என்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருமாவளவன் அவரது ட்விட்டர் பக்கத்தில், "இன்று பிறந்தநாள் காணும் திரு.ரஜினி அவர்களுக்கு  இனிய வாழ்த்துகள். நாயகன், திரைத்துறையில் இயக்குநருக்கு ஏற்ப இயங்க வேண்டும்; அரசியலில் இயக்குநராகவே இயங்க வேண்டும் என்பதை திரு.ரஜினி நன்கு அறிவார். இயக்குநர் ரஜினியாக அரசியலில் இயங்க வாழ்த்துகிறேன்." என பதிவிட்டுள்ளார்.


Advertisement