சாமியாடி கவனம் ஈர்த்த பெண்!.. குறைகேட்பு கூட்டத்தில் பரபரப்பு: இப்படியும் ஒரு வழி இருக்கு பாருங்க மக்களே..!

சாமியாடி கவனம் ஈர்த்த பெண்!.. குறைகேட்பு கூட்டத்தில் பரபரப்பு: இப்படியும் ஒரு வழி இருக்கு பாருங்க மக்களே..!


there-was-excitement-in-the-womens-grievance-gathering

ராமநாதபுரம் மாவட்டம், பெருநாழி பகுதியை சேர்ந்தவர் கோட்டைச்சாமி. இவரது மனைவி சாந்தி (65). இந்த தம்பதியினரின் மகன் ரமேஷ்.  சாந்தியின் அண்ணன் குருசாமி, கோவில் கட்ட சாந்தியின் குடும்பத்தினருக்க்கு சொந்தமான நிலத்தை கேட்டு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்திற்கு நிலப்பிரச்சினை தொடர்பாக மனு அளிக்க சாந்தி வந்திருந்தார். முதல் வரிசையில் அமர்ந்திருந்த அவர் திடீரென்று எழுந்து, காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் சாமியாடியுள்ளார். இதனால் அந்த கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சாந்தியை அமைதிப்படுத்திய காவல்துறையினர், அவரது முகத்தில் தண்ணீர் தெளித்தனர். இதனையடுத்து அங்கிருந்த சாந்தியின் மகன் ரமேஷ், அவரது கையில் வேப்பிலையை கொடுத்தார். இதனையடுத்து சாந்தியை அழைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கத்துரை அவரிடம் விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில், பெருநாழியில் தனக்கு சொந்தமான நிலத்தினை தனது அண்ணன் கோவில் கட்ட தருமாறு கேட்டு தொல்லை கொடுத்ததாகவும், கொடுக்க மறுத்ததால் தன்னை தாக்கியதாகவும், இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும்  நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று கூறினார். இதனை கேட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கத்துரை இது குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.